சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு, தொடங்கிய கடந்த 3 மாதத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.36 ஆயிரம் கோடி என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரே நிறுவனம் டாஸ்மாக். மதுபான கடைகளை மாநில அரசே திறந்து, மக்கள் குடிகாரர்களாகக்கி வருமானம் ஈட்டி வருகிறது. தினசரி பல கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனம், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் நூறு கோடி ரூபாயை கடந்து விற்பனை செய்து, லாபத்தை ஈட்டுகிறது.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
“கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் ( மார்ச் வரை ) ரூ.2,200 கோடி அதிகமாக டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டு 26,797 கோடி ரூபாய் வருமானம் கிடைத்த நிலையில், 2018-2019ம் ஆண்டு 31,157 கோடியாகவும், 2019-20ம் ஆண்டில் 33,133 கோடியாகவும் இருந்தது.
இது 2020 -2021ம் ஆண்டில் மொத்தமாக ரூ.33,811 கோடி ஆக உயர்ந்த நிலையில், . நடப்பு ஆண்டில் ( மார்ச் வரை ) மட்டும் ரூ.36,013 கோடி மதுபானம் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுபானங்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் அரசுக்கு வரும் வருவாய் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதுமாக கணக்கிடும் பட்சத்தில் வருவாய் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.