சென்னை: கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக, தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி முதல்  டாஸ்மாக் பார்களை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்படி, தமிழகத்தில் சுமார் 3250 மது பார்கள் திறக்கப்பட உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபார்கள்  மூடப்பட்டன. ஆனால், பொதுமுடக்க தளர்வு அறிவிக்கப்பட்டபோது, அரசுக்கு வரும் தேவைப்பட்டதால், டாஸ்மாக் கடைகள் கடந்த மே மாதம் 7ந்தேதி சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் முதல்கட்டமாக  திறக்கப்பட்டன. ஆனால், பார்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.  பின்னர் படிப்படியாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், பார் மட்டும் இதுவரை திறக்க அனுமதி வழங்கப்பட்வில்லை.இதனால், பார் உரிமையாளர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  இதையடுத்து டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என்று பார் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மதுபார்களை திறப்பதற்கு உடனடியாக அனுமதிக்காவிட்டால், பார் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இந்தநிலையில், டாஸ்மாக் பார்களை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்திருந்தார். அதன்படி, வரும் 15ந்தேதி தமிழகம் முழுவதும டாஸ்மாக் பார்கள் திறக்கப்படும் என தெரிகிற்து.  சுமார் 8 மாதங்களுக்கு பிறகு, தற்போது  தமிழகம் முழுவதும் உள்ள 3,250 டாஸ்மாக் பார்களையும் திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.