சென்னை

மிழகத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் விலையை நாளை முதல் டாஸ்மாக் உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதால் மதுப்  பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்,

தமிழகத்தில் மது பானங்கள் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.  இதற்கு முன்பு மதுக்கடைகள் பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை திறந்து இருந்தது.   தற்போது கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் காரணமாகக் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன/

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை குறைந்துள்ளதால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதையொட்டி டாஸ்மாக் நிர்வாகம் நாளை முதல் வெளிநாட்டு மதுபானங்கள் விலையை உயர்த்தி உள்ளது.  சென்ற ஆண்டு கொரோனா பாதிப்பு காலத்தில் ஏற்கனவே மது பானங்கள் விலை உயர்த்தப்பட்டதைப் போல் தற்போதும் உயர்த்தப்பட உள்ளன.

அதையொட்டி மது பான விலை குறைந்த ரக மது பானங்கள் விலையில் ரு.10, நடுத்தர ரக மதுபானங்கள் விலையில் ரூ.300 மற்றும் உயர்ரக மதுபானங்கள் விலையில் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.   ஏற்கனவே பழைய விலையில் உள்ள மதுபானங்களை முழுவதுமாக விற்பனை செய்து முடிக்கப்பட்டுள்ளதால் இனி புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்பட உள்ளது.   இதனால் மதுப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.