தமிழகத்தில் 7ந்தேதி (நாளை) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் நாளை முதல் திறக்கப்படும் என தமிழகஅரசுஅறிவித்தது.
மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து, மதுக்கடைகளி கூட்டம் கூடுவதைதவிர்க்க எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படியும்,
மதுக்கடைகளை கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?
‘மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா?
மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் ஆன்லைனில் மதுபானத்தை விற்க முடியுமா?
வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டெலிவரி செய்ய முடியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தமிழகஅரசு பிற்பகல் 2.30 மணிக்குள் பதில் தர உத்தரவிட்டு உள்ளது.