சென்னை,
ங்க கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், மீனவர்கள் யாருக்கும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாகி உள்ளதை காட்டும் படம்
புயல் உருவாகி உள்ளதை காட்டும் படம்

துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் காரணமாக கடந்த ஆண்டுபோல மழை அதிகரித்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கருதி கடற்கரை மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு நாடா புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த  நாடா புயல் கடலூருக்கு அருகில் டிசம்பர் 2 நள்ளிரவு அல்லது அதிகாரை  கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
tn-logo
இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் மற்றும் வானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் காரணமாக சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங் களிலும், உள் மாவட்டங்களிலும் நாளை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும். இது படிப்படியாக அதிகரித்து, மேலும் அதிகரிக்கும்.
2-ந்தேதி முதல் மழை அளவு மேலும் அதிகரிக்கும். அப்போது தமிழ்நாடு மற்றும் புதுவை முழுவதும் பலத்த மழை பெய்யும்.
அதன்பிறகு உள் மாவட்டங்களிலும் மேலும் பரவி அதிக அளவில் மழை கொட்டும். கடலோர மாவட்டங்களில் பலத்த மற்றும் மிகபலத்த மழை பெய்யும். என சென்னை வானிலை மையம் எச்சரித்து உள்ளது.