தஞ்சை:
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள், தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகிக்கிறார். திருக்கானூர் பட்டி பங்குதந்தை தேவதாஸ் இக்னேசியர் முன்னிலை வகிக்கிறார்.
இதில் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டுள்ளது. இந்த நார்களால் காளைகளும், வீரர்களுக்கும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டில் 549 காளைகள், 401 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
வீரர்கள் யாராவது காயம் அடைந்தால் உடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சிற்கு தனிப்பாதை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.