தஞ்சாவூர்: திருமணத்தை நிறுத்தியதால், அந்த பெண்ணின் புகைப்படத்தை அபாசமாக  முகநூலில் பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் அறிவுடை நம்பி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாராக இருப்பவர் அறிவுடைய நம்பி (வயது 41).. இவருக்கு ஏற்கனவெ திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், முதல்மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி கடலூரை சேர்ந்த 28 வயதான ராகவி என்ற பெண்ணுடன்  நிச்சயம்  முடித்துள்ளார்.

இதற்கிடையில், அறிவுடைய நம்பிக்கு வேறுசில பெண்களுடன் தொடர்பு இருப்பது குறித்து தகவல் அறிந்த  மணப்பெண் ராகவி, தனது திருமணத்தை உடனடியாக நிறுத்தினார்.

இதனால்,  ஆத்திரமடைந்த அறிவுடைநம்பி, அப்பெண் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும்,  அப்பெண்ணுடன் நிச்சயதார்த்தத்தின்போது எடுத்து கொண்ட புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வளைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ராகவி,  கடந்த ஜூலை மாதம் போலீஸில் புகார் அளித்திருந்தார். ஆனால், சில மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் மெத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறத. அறிவுரை நம்பி தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் கூறி வந்துள்ளனர். இதற்கிடையில், அறிவுடைநம்பி  தரப்பில் இருந்து, அந்த பெண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளது.

இதனால் மனம் உடைந்த பாதிக்கப்பட்ட பெண், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்ரியாவை சந்தித்து புகார் கூறினார். அவரின் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் மேற்பார்வையில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் அறிவுடை நம்பியை தேடி வந்தனர். அவர் சென்னையில் ஒரு ஓட்டலில் பாதுகாப்பாக தங்கியிருந்தது தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்று, சிறையில் அடைத்தனர். இது தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.