சென்னை:

ஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரத்தில் சர்ச்சைகள் உருவாகி உள்ள நிலையில், குடமுழுக்ககை சிறப்பாக நடத்தும் வகையில், தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் 21பேர் கொண்ட குழு அமைத்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை கண்காணிப்பற்காக அமைக்கப்பட்ட இந்த குழுவில், நிதித்துறை, நகராட்சி நிர்வாகம், சுற்றுலாத் துறை செயலாளர்கள், தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு துறைகளின் கூடுதல் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா, வருகிற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குட முழுக்கு விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகஅரசு 21 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், , தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகப் பணிகளை கண்காணிக்க 21 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவில், அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, தீயணைப்புத்துறை டிஜிபி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெறுகின்றனர்.

இதற்கிடையில், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை  தமிழ் மொழியிலேயே நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெற உள்ளதாக, இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.