சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகமான டான்ஜெட்கோவின் கழகம் ரூ.1.40லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடன் சுமையை குறைக்க தற்போது, ஒரே நிறுவனமாக செயல்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை 3 கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசால் நியமிக்கப்பட்ட தனியார் ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (இஒய்) அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனமான டாங்கட்கோவை மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்க பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
தமிழ்நாடு மின்சாரம் (மறுசீரமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள்) பரிமாற்றத் திட்டம், 2010, 2008 ல் மாநில அரசாங்கத்தின் கொள்கை ஒப்புதலுடன் தொடங்கப்பட்ட நீண்டகால நிர்வாக செயல்முறையின் நிறைவைக் குறிக்கும் வகையில், மாநில அரசு, புதிய திட்டத்துடன், சிறந்த செயல்திறன் மற்றும் லாபத்தை நோக்கமாகக் கொண்ட மத்திய சட்டத்தின்படி TNEB இப்போது தனித்துவமான கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்க முடிவு செய்துள்ளது.
TANGEDCO மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்தும் அதே வேளையில், TANTRANSCO ஆனது பரிமாற்ற செயல்பாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. TNEB லிமிடெட் முதன்மையாக ஒரு முதலீட்டு நிறுவனமாக இருக்கும் மற்றும் இரண்டு துணை நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாக இருப்பதுடன், TANGEDCO மற்றும் tantransco மின்சாரத் துறையில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) ஒட்டுமொத்த கடன், 2022 மார்ச் நிலவரப்படி, 1.39 லட்சம் கோடி (தோராயமாக ரூ.1.4 லட்சம்கோடி) ரூபாய்; அதில் வங்கிகளில் வாங்கிய கடன், 11,765 கோடி ரூபாய்; நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன், 1.20 லட்சம் கோடி ரூபாய்; அரசிடம் வாங்கிய கடன், 4,582 கோடி ரூபாய் * மொத்த கடனில், மின் உற்பத்தி பிரிவின் கடன், 30,000 கோடி ரூபாய் தான் இருக்கும் மீதி அனைத்து கடனும் மின் பகிர்மான பிரிவையே சார்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்யவும், இலவச மின்சாரங்களை வழங்கவும், தேர்தல் வெற்றியை பெறவும், இலவச மின்சாரங்களை ஆளும் கட்சிகள் வழங்கி வருவதால், மின்சார வாரியம் இதுவரை இல்லாத அளவு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தேவைக்கேற்ப மின்உற்பத்தி செய்ய முடியாத நிலையில், பல ஆண்டுகளாக தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம், உபகரணங்கள், நிலக்கரி போன்றவற்றை கொள்முதல் செய்து வருவதால், மின்வாரியத்தின் கடன் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே மத்திய மின்சார சட்டத்தின் கீழ், தமிழக மின் வாரியம், 2010ல் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய, இரு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. தொடரமைப்பு கழகம், அதிக திறன் உடைய மின் கோபுர வழித்தடம் வாயிலாக மின்சாரத்தை, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்கிறது.மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அனல், நீர், எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை நிர்வகிப்பதுடன், மாநிலம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியையும் செய்கிறது. இரு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டாலும், இதுவரை அவை, ஒன்றாகவே செயல்படுகின்றன. இந்த நிலையில், தற்போது 3 நிறுவனங்களாக பிரிக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது . தோராயமாக ரூ.1.4 லட்சம்கோடி கடனல் தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2020 – 21 பட்ஜெட்டில், ‘மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகத்தின் நிதி மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்த, விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என, அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக அரசு, மின்வாரியத்தின் கடன் சுமை மற்றும் நிதி நிலை சீரமைப்புக்கு, தனியார் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்க முடிவு செய்தது. ஏற்கனவே மத்திய அரசும், மின் வினியோகம், மின் கட்டணம் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக அரசும், கடனை குறைப்பது தொடர்பாகவும், நிதி நெருக்கடியை சரிசெய்ய, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ‘எர்னஸ்ட் அண்டு யங்’ என்ற தனியார் நிறுவனத்திடம், திமுக அரசு உதவி கோரியது. அதனபடி அந்தநிறுவனத்திற்கு 2021 அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து அந்நிறுவனம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் கடன்கள் உள்பட அனைத்தையும் ஆய்வு செய்து, தற்போது அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையில், கடன்சுமையை தவிர்க்க மின்வாரியத்தை 3 கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்ற அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டான்ஜெட்கோ), உற்பத்திக்கு தனி நிறுவனமும், மின் பகிர்மானத்திற்கு தனி நிறுவனமும், காற்றாலை மற்றும் சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்திற்கு, ஒரு நிறுவனம் என, மூன்று நிறுவனங்களை தொடங்கி செயல்படுத்துமாக அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிக்கை மீது தமிழ்நாடு அரசு, டான்ஜெட்கோ ஆய்வு செய்து வருகிறது.
‘எர்னஸ்ட் அண்டு யங்’ என்ற நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்று தனித்தனி நிறுவனங்களாக பிரிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன் மின் உற்பத்தி பிரிவை தனி நிறுவனமாக தொடங்க அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு தொடங்கும் பட்சத்தில், அதன் கடன் சுமை குறையும். இதனால், வங்கிகள், கடனுக்கான வட்டியை, 1 சதவீதம் குறைக்கும் பட்சத்தில், ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும் என தெரிவித்து உள்ளது.
தற்போதைய நிலையில், மழைக்காலங்களில், குளிர் காலங்களில் , மின்தேவை குறையும்பட்சத்தில், அனல், நீர், எரிவாயு மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது, உற்பத்தி பிரிவு தனி நிறுவனமாக செயல்படும் பட்சத்தில் ஆண்டு முழுதும், முழு அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படும். அதில் உபரி மின்சாரம், தனியார், பிற மாநிலங்களுக்கு விற்று, வருவாய் ஈட்ட முடியும் என்று தெரிவித்து உள்ளது.
மின் பகிர்மானம் பிரிவு மின்தடை ஏற்படாமல் சீராக மின் வினியோகம் செய்வதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், மின் பகிர்மான கழகத்தின் செயல்பாடு மேம்பட்டு, புதிதாக கடன் வாங்குவது தடுக்கப்படும். மின்சார விற்பனையில் அதிக கவனம் செலுத்தப்படும் என்பதால், அதற்கு ஏற்ப, மின் கட்டணம் வாயிலாக வருவாய் கிடைக்கும்.
அதுபோல பசுமை மின்சார பிரிவு புதிதாக துவக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும், ‘டெடா’ எனப்படும் எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் மின் வாரியத்தின் பசுமை மின்சார பிரிவுகளை ஒருங்கிணைத்து, தனி நிறுவனம் தொடங்கி நடத்தலாம் என்றும், காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசும், வங்கிகளும் போட்டி போட்டு கடன் வழங்குகின்றன. அவற்றிடம் இருந்து கடன் வாங்கி, புதிய மின் நிலையம் அமைத்து, மின்சாரம் விற்று வருவாய் ஈட்டலாம் என்றும் ஆலோசனை வழங்கி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்க BMS இன் மின்சாரப் பிரிவின் சட்ட ஆலோசகர் R முரளி கிருஷ்ணன், வரி இழப்பு, மானியங்கள், இலவச மின்சாரம் போன்ற விநியோக முடிவுகளால் மின்சார வாரியத்திற்கு கடன் ஏற்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாகப் பிரிக்க பரிந்துரைத்தது. “இருப்பினும், அப்போது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் 50% திறன் கொண்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்கை கவனத்தில் கொண்டு வந்தார். “டாங்கட்கோவை மூன்று நிறுவனங்களாக மாற்றினால், அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி செழித்து திறம்பட செயல்பட முடியும்,” என்று கூறியவர், ஏற்கனவே டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சில மாநிலங்கள் அவற்றின் விநியோகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் பிரிவுக்குப் பிறகு சாதகமான விளைவுகளைக் கண்டுள்ளன. மின் உற்பத்தி ஒரு தனித்துவமான பயன்பாடாக மாறும் போது, அது மிகவும் திறம்பட தனியார் பயன்பாட்டுடன் போட்டியிடலாம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உருவாக்க முடியும், என்றும் தெரிவித்தார்.
இந்த யோசனைக்கு TNEB ஊழியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. “மின் வாரியத்தை பிரித்தால், தனியார் உற்பத்தி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும். தற்போதைய நிலவரப்படி, டாங்கட்கோவில் காற்றாலை, சோலார் ஆலைகள் இல்லை. எனவே, சொந்த மின் உற்பத்தியை அதிகரிப்பதில் மின்வாரியம் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.
இதுதொடர்பாக பேசிய எரிசக்தி துறைக்கு பொறுப்பான கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இந்த பிரச்சினையில் அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றவர், நாடு முழுவதும் உள்ள பல மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்கள்) ஏற்கனவே மின் துறையை உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவுகளாகப் பிரித்துள்ளன. வட இந்திய மாநிலங்களில் இருந்து நிலக்கரியைப் பெற வேண்டிய அவசியம் மற்றும் பெரும் போக்குவரத்துச் செலவுகள் காரணமாக மின் உற்பத்தியில் அதிக முதலீடு செய்வதே டாங்கெட்கோவுக்கு சவாலாக உள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து எரிசக்தி துறை ஆலோசித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமிழ்நாடு மின்சார வாரியம் நவம்பர் 1ந்தேதி முதல் மூன்றாக பிரிக்கப்பட இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.