லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ ஏப்ரல் 9 வெளியாக வேண்டிய படம் கொரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம் நினைத்தபடி வெளியாகாவில்லை.
இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர் .பல கோடி வியாபாரம் கொண்ட ‘மாஸ்டர்’ படம் கொரோனாவால் தியேட்டரில் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால் படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்னும் வருத்தமடைந்தார்கள்.
இந்த நிலையில், மே மாதம் இறுதியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தை அவரது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.ஆனால் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் ஜூன் 22-ம் தேதி தமிழன் திருவிழா என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள். விஜய்யின் பிறந்தநாளில் மாஸ்டர் வெளியாகுமா? ரசிகர்களின் மாஸ்டர் பிளான் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.