கடப்பா:

ந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள  ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்கள் இறந்த நிலையில்  மீட்கப்பட்டனர். அவர்கள் குறித்த தகவல்கள் தெரிய நிலையில், தற்போது, அவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ராமர் கோயில் ஏரியில் 5 பேர் உடல்கள் இறந்த நிலையில் மிதந்தது. அதை கைப்பற்றிய ஆந்திர போலீசார் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கும் என்று கூறினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர போலீசார் என்கவுண்டர் செய்து தமிழர்களை கொன்று ஏரியில் வீசி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான அந்த குள்ளத்தில் 5 தமிழர்கள் இறந்த நிலையில் மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

செம்மரம் வெட்ட தமிழர்களை  ஆந்திர போலீசார் கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை செய்ய தமிழக போலீசாரும் ஆந்திரா சென்றிருந்த நிலையில், தற்போது, இறந்த 5 பேரும் யார் என்பது அடையாளம் தெரிய வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள்,  அடியனூர் முருகேன், ஆவாரை கருப்பண்ணன் என்பதும், மற்ற மூவரும் கொலாக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் 5 பேரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கரியக்கோவில் மலைக் கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன், அடியனூர் முருகேசன், ஜெய்ராஜ், முருகேசன் என்கிற தங்கராஜ், சின்னப் பையன் ஆகியோரே உயிரிழந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சேலத்தில் இருந்து சென்ற போலீசார், கடப்பா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களது உடல்களை அடையாளம் கண்டு விசாரணையில் இதனை உறுதி செய்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அவர்களின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.