தமிழர்களை கண்காணிக்கும் கன்னடர்கள்! : ராஜாத்தி சல்மா அதிர்ச்சி தகவல்!

Must read

நெட்டிசன் புகுதி:
பிரபல கவிஞரும் அரசியல் பிரமுகருமான ராஜாத்தி சல்மா அவர்களின் முகநூல் பதிவு:
bandh-story_647_092515013703
இது வெறும் பதிவு அல்ல . பதில் அல்லது ஆலோசனை தேவை.–
பேங்களூரில் உள்ள சர்வதேச I T நிறுவனத்தில் பணி புரியும் எனது சகோதரியின் மகன் அங்கு வேலை நிறுத்தம் என்று சென்னைக்கு வந்து விட்டான் .
நேற்று நள்ளிரவில் வந்த ஒரு இன்டர்நெட் அழைப்பில் பேசிய கன்னட அமைப்பை சார்ந்த ஒருவர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ள அழைத்தார். நான் சென்னையில் இருக்கிறேன் என்று இவன் சொல்லிவிட்டு எனது எண் எப்படி கிடைத்தது என்று கேட்க இங்கு பணி புரியும் அத்தனை தமிழர்கள் எண்ணையும் சேகரித்து விட்டதாகவும் வேலை நிறுத்தம் எத்தனை நாள் நடந்தாலும் அங்கு பணி புரியும் தமிழர்கள் பந்தில் பங்கு பெற்றாக வேண்டும் என்றும் மிரட்டலாக சொல்லி விட்டு வைத்தார்..
இதை எப்படி எதிர் கொள்வது அரசு தன் கவனத்தில் கொள்ளுமா??? (அரசு என்று ஒன்று இங்கு இருக்கிறதா)

More articles

Latest article