நெட்டிசன் பகுதி:
கலாநிதி (Kala Nidhi ) அவர்களின் முகநூல் பதிவு:
“தன் ஆளுகையில் இருந்த சிங்கப்பூரினால் எந்த வருமானமும் இல்லாமல் வீணாக தூக்கி சுமப்பதாக நினைத்த மலேசியா அதற்கு சுதந்திரம் தந்து தனிநாடாக்கி கழட்டி விட்டது.தனிநாடாக போக விரும்பவில்லை என்று கதறினார்கள் சிங்கப்பூர்வாசிகள்.அழுதவர்களை தேற்றினான் ஒரு ஒற்றை மனிதன்.அவன் பெயர் லீ க்யுவான் யூ!
யார் நம்மை வேண்டாமென்று புறம் தள்ளினார்களோ அவர்களுக்கு முன் தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுவோம் என்று சபதமிட்டவன் தன் வாழ்நாளில் மலேசியாவை பின்னுக்கு தள்ளிய முன்னேறிய நாடாக சிங்கப்பூரை வளர்தெடுத்தான்.ஒரு கட்டத்தில் மலேசியா சிங்கப்பூரை பொறாமையோடு பார்க்கும் அளவுக்கு சிங்கப்பூரின் வளர்ச்சி விஸ்வரூபமெடுத்தது.
download-3
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு ஒரே வேண்டுகோள் “உன்னுடைய ஒரு சொட்டு தண்ணீரும் எனக்கு வேண்டாம்! அதே நேரம் மழை பெய்து அணை நிரம்பினால் உபரிநீரின் ஒரு சொட்டும் தமிழக எல்லைக்குள் விழக்கூடாது! “என்று சொல்லி கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை, இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனத்தை, மணல் கொள்ளையை தடுத்து, அறிவியல்பூர்வமாக விவசாயத்தை முன்னேடுத்து செல்லக்கூடிய ,விவசாய விளை நில விற்பனையை தடுக்கக்கூடிய ஒரு வலுவான தலைமையே இப்போதைய தமிழகத்தின் தேவை!
ஆனால் நமக்கு வாய்த்த தலைவர்கள்?ஒரே குரலில் பேசுவதற்கு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இடம் கொடுப்பதில்லை.
பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட தமிழனுக்கு அவர்களை பேசும் தகுதி இல்லை! திருடர்களை தேர்ந்தெடுப்பவன் அவர்களை விட பெரிய திருடனாகத்தானே இருக்க முடியும்.?