பெங்களூரு:
காவிரி பிரச்சினையை தொடர்ந்து கன்னட வெறியர்கள் தமிழகர்களின் கடைகள் மற்றும் தமிழக வாகனங்களை தாக்கி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனதை தொடர்ந்து தற்போதுதான் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து பெங்களூருவில் போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்களும் வன்முறையும் வெடித்தது.
இந்த நிலையில் இன்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த கடைகள் மற்றும் அவர்களது வாகனங்களை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அப்பகுதிக்கு வந்த கர்நாடக காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தது.
இரு மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பதட்டம் நிலவுகிறது. மைசூரில் தமிழகத்தை சேர்ந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து இரு மாநில தலைமை செயலாளர்களும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியதாக தெரிய வருகிறது.
Patrikai.com official YouTube Channel