பெங்களூர்,
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பொங்கலையொட்டி தமிழர்கள் வைத்திருந்த பேனர்களை கன்னட வெறியர்கள் கிழித்து சேதப்படுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
பெங்களூர் அருகே உள்ள அல்சூர், சிவாஜி நகர், புலிகேசி நகர், சகாயபுரம், டேனரி ரோடு போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு , பொங்கல் வாழ்த்து சொல்லும் வகையில், தமிழ் திரைப்பட நடிகர்களின் படங்களுடன் பேனர்கள் வைத்திருந்தனர்.
இந்த பேனர்கள் மீது கன்னட வெறியர்கள் கற்கலை வீசியும், கிழித்து சேதப்படுத்தியும் உள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சில தமிழர்களின் வீடுகளிலும், வாகனங்கள் மீதும் கற்களை வீசியுள்ளனர்.
மேலும், பெங்களூர் சகாயபுரம் பகுதி வார்டு கவுன்சிலராக உள்ள, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழுமலை என்ற தமிழரின் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்ற அதிமுக நிர்வாகி வைத்திருந்த பேனரையும் கிழித்து எறிந்தனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.