டில்லி,

தார் தொடர்பான வழக்கி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று விசாரணையின்போது, ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கச்சொல்வது ஏன் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும், குடிமக்களின் தோழனாகவே மத்திய அரசு இருக்க வேண்டும் என்றும் கூறியது.

மத்திய மாநில அரசின் திட்டங்கள் தவிர தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் ஆதார் எண்ணை கேட்டு பெறுகின்றனர். இது தனிநபர் பாதுகாப்பு உரிமையை மீறியது என பலவழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.

ஆதார் அட்டை தொடர்பான  பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,  மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதாடினார்.  அப்போது, இன்சூரன்ஸ்   காப்பீடு மற்றும்  செல்போன் நிறுவனங்களிடம் இணைப்புக்காக செல்லும் போதும் தமது ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டியது உள்ளது… இதன் காரணமாக தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றார்.

அதையடுத்து தலைமைநீதிபதி மிஸ்ரா மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அப்போது, ஒருவர் காப்பீடு எடுக்கவோ மற்ற விஷயங்களுக்கோ தானாக முன்வந்து விவரத்தை தெரிவித்தால் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் அதை முன்பின் அறியாத ஒரு நபர் அல்லது நிறுவனத்திடம் தெரிவிக்க மத்திய அரசு  கட்டாயப்படுத்தப்படுவதில்தான் பிரச்சினை எழுகிறது என்றார்.

குடிமக்களின் அடிப்படை உரிமைகளை, ஆதார் தகவல்களை பெறும் தனியார் நிறுவனங்கள் எப்படி பாதுகாக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும்,  தேசிய கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் குடிமக்கள் குறித்த விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆதாரைப் பொறுத்தவரை இத்தகைய பாதுகாப்பு இருக்கிறதா என்று உதய் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேருலும்,  ஆதார் முறையை கட்டாயப்படுத்தினால் ஒருவர் பிறப்பது முதல் இறப்பது வரை அவரை கண்காணிப்பதற்கான நிலைமை உருவாகி விடுவதாகவும், வங்கிக் கணக்குகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படும் போது பொதுமக்களின் விவரங்கள் தனியார் நிறுவனங்களுக்குப் போய் சேர்ந்து விடுகின்றன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

குடிமக்களின் தோழனாக மத்திய அரசு இருக்க வேண்டுமே தவிர அவர்களை வழிநடத்துபவராக இருக்கக் கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.