திருட்டுத் தனமாக இணையதளத்தில் திரைப் படங்களை வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார் விஷால் .
இந்நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா அல்லா ரெட்டிக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழ்ராக்கர்ஸ் பெயரில் இருக்கும் ட்விட்டர் கணக்கில், அவருக்கு வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளனர்.
குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் பயன்படுத்திய லோகோவில் உள்ள மாதிரி, விஷால் நிச்சயதார்த்தத்தில் பின்னனி அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது குறித்து அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர்.