சென்னை,

புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தான் இயற்கையின் நியதி. அந்த வகையில் 2016-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சோதனைகளை மறந்து சாதனைகளை படைக்கும் ஆண்டாக 2017-ஆம் ஆண்டு அமையும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

புதியதாய் பிறக்கும் 2017 வருடப் புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்போம். சாதி, மதம், இனம், மொழி, வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில் கடவுள் அருளால் இன்றிலிருந்து ஒளிவெள்ளம் ஏற்படட்டும். எனது இதயப்பூர்வமான புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை:

தமிழிசை வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கைகளால், கருப்பு பணம் ஒழிந்து, கருமை அகன்று, வெள்ளையும் வெளிச்சமும், பணத்திலும் மனதிலும், ஒளிரும் காலம் இந்த புத்தாண்டில் கனிந்து வருகிறது.

அனைத்து துன்பங்களும் அகன்று, அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ஆண்டாக இந்த ஆங்கிலப் புத்தாண்டு மலர வேண்டும், இந்தியா வளர வேண்டும் என்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதியதாய் பிறக்கும் 2017 வருடப் புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்போம். சாதி, மதம், இனம், மொழி, வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில் கடவுள் அருளால் இன்றிலிருந்து ஒளிவெள்ளம் ஏற்படட்டும்.

எனது இதயப்பூர்வமான புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 

கடந்து, 2017 இல் உலகம் அடியெடுத்து வைக்கிறது. வேகமாக ஊடுருவி வருகின்ற மேல்நாட்டு கலாச்சாரத்தால் தமிழ்ப் பண்பாட்டுத் தளம் சிதைந்து வருகிற அவலம் மிகவும் கவலை தருகிறது. உலகின் மிகப் பழமையான தமிழர் நாகரிகத்தின் அடிப்படை அறநெறிகளைப் பாதுகாக்க இப்புத்தாண்டு நாளில் உறுதிகொள்வோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் 

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய, மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகக்கூடிய புத்தாண்டாக 2017 ஆம் ஆண்டு பிறக்க வேண்டும். நல்லதே நடக்கும் நலமுடனே வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு, வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாக இறைவனை வேண்டி, நாட்டு மக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:

2016-ம் ஆண்டில் சோதனைகளையும், சாதனைகளாக்கி, 2017-ம் புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புதிய வருடத்தில் அனைத்து தமிழர்களுக்கும் புத்தாண்டு பரிசாக ‘ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி’ வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி

புத்தாண்டு என்பது புதிய வாய்ப்புகளை நமக்கு ஏற்படுத்தித் தருவது ஆகும். புத்தாண்டு என்பது தலா 24 மணி நேரம் கொண்ட 365 நாட்களை நமக்கு இலவசமாக வழங்குகிறது. காலம் தரும் இந்தக் கொடையை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தனி மனித வாழ்க்கையிலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் புதிய உயரத்தை எட்டி சாதனைகளை படைக்க முடியும். 2017-ஆம் ஆண்டை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஆண்டாகவும் மாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த புத்தாண்டு நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

தவாக தலைவர் பண்ருட்டி வேல்முருகன்:

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வறட்சியையும் இயற்கை பேரிடரையும் ஒருசேர தந்த 2016-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறுகிறது; தமிழகம் இதுவரை கண்டிராத பெரும் வறட்சியை எதிர்கொண்டிருக்கும் சூழல் உதயமாகிறது புத்தாண்டு. நாடு இதுவரை எதிர்நோக்காத பொருளாதார நெருக்கடியை 2016-ம் ஆண்டு நமக்கு தந்தது. வரும் புதிய ஆண்டிலாவது இத்தகைய நெருக்கடி நீங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிட வேண்டும்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் மாண்டுபோகும் பெரும் துயரம் 2016-ம் ஆண்டின் இறுதிநாட்களில் அடுத்தடுத்து நடந்தேறுகிறது. இத்துயரம் தோய்ந்த சூழலில் பிறக்கும் புதிய ஆண்டிலாவது தமிழகத்து நதிநீர் உரிமைகள் காப்பாற்றப்பட்டு விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம்.

தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த சிங்கள அரசு அவற்றை அரசு உடைமையாக்கிவிட்டதாக அறிவிப்பு வந்துள்ள நிலையில்தான் புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம். பிறக்கும் புதிய ஆண்டில் நமது தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை பகுதிகளில் சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தலுமின்றி கடலுக்கு சென்று திரும்பிடும் இயல்பு நிலை உருவாகிட வேண்டும்.

புதிய 2017-ம் ஆண்டில் தமிழகத்தின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க நாம் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உறுதியேற்போம். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!