சென்னை:
திமுக இளைஞரணி துணைச் செயலரும் மதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தவருமான தூத்துக்குடி ஜோயலுக்கு கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
0
திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி அனுப்பியுள்ளதாக உள்ள அக்கடிதத்தில், தூத்துக்குடி திமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் ஜோயல் தொடர்ந்து கூட்டங்கள் நடத்துவதாகவும்,   எதற்கெடுத்தாலும் மு.க. ஸ்டாலின் பெயரை பயன்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டுகிறது.
1
இக்கடிதம் குறித்து விளக்கம் கேட்க, ஜோயலை தொடர்புகொண்டபோது.. நீண்ட நேரம் ரிங் ஆனதே தவிர அவர் போனை எடுக்கவில்லை.
ம.தி.மு.க.வில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பதவி வகித்த ஜோயல், அக் கட்சி பொதுச்செயலாளர் வைகோவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.  சமீபத்தில்தான்  அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.
இதற்கிடையே, “ஜோயலின் உட்கட்சி எதிரிகள்  கிளப்பும் புரளி இது” என்று முழு நோட்டீஸை வார்த்தைகளால் மறைக்கிறார்கள் ஜோயல் ஆதரவாளர்கள்.