சென்னை:
மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  மாலை 5 மணி அளவில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். அவருடன் மூத்த அதிகாரிகள் சிலர்  பங்கேற்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழகஅரசு எடுத்து வந்தாலும, வைரஸ் பரவல் நாளுக்கு நாள்அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று மாலை 5 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது,   தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட  வரும் நடவடிக்கை, பொதுமுடக்கம் மற்றும் சாத்தான்குளம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இநத்  சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழக முதல்வர் 4வது முறையாக ஆளுநரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]