சென்னை:
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில், அதிமுகவினர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  இருப்பதாக சமூகவலைதளங்களில ஒரு புகைப்படம் பரவியிருக்கிறது.
admk-poster-01-600-01-1475320539-1
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த பத்து நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க  லண்டனில் இருந்து  சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் வந்துள்ளார். .
இந்த நிலையில், “ஜெயலலிதாவை அனைவரும் பார்க்க வேண்டும். அவரை யாரோ சிலர் ரகசியமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்” என்று சசிகலா தரப்பு மீது குற்றம்சாட்டியிருந்தார் சசிகலாபுஷபா எம்.பி.
இந்த நிலையில், தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக என்ற பெயரில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் ஒட்டப்பட்டருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்:
“எச்சரிக்கை! எச்சரிக்கை! புரட்சித் தலைவரின் இறப்பில் ஒரு கும்பல் கொள்ளையடித்தது! புரட்சித் தலைவி அம்மாவிடம் நரிகளின் ஜம்பம் பலிக்காது! எங்கள் அம்மாவை உடனே காட்டு இல்லையேல் தற்கொலை செய்துகொள்வோம்! கழகத்தைக் கைப்பற்ற நினைக்காதே! அது நடக்காது அடிமையாக இருப்போம் அம்மா ஒருவருக்கே!! “ என்ற வாசகங்கள் உள்ள அந்த போஸ்டரில் கீழே, “தென்சென்னை வடக்கு மாவட்டம்” என்றுக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இது தி.முக.வினர் தங்கள் கட்சிக்காக ஒட்டிய போஸ்டரை  போட்டோ ஷாப்  செய்எது மாற்றி பதிவிட்டிருக்கிறார்கள் என்றும் சமூகவலைதளங்களில் பதிவு ஒன்று பரவி வருகிறது. அந்த படம் இதோ.
k
நாடு முன்னேறிச்சோ இல்லியோ… நவீன வசதிகள் பெருகியிருக்கு!