சென்னை: மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை கண்டு தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்காது என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், கவனர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கி யுஜிசி அறிவிப்பு வெளியிட்டதற்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.  மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை கண்டு தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்காது என எச்சரித்துள்ளது.

மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் யு.ஜி.சி., விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்  கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில்,   துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை சாராதவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கும் வகையிலும் யுஜிசி கொண்டு வந்துள்ள விதிமுறைகள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான நேரடி தாக்குதல்.

புதிய UGC விதிமுறைகள் VC நியமனங்கள் மீது ஆளுநர்களுக்கு பரந்த கட்டுப்பாட்டை வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது ஆகியவை கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

மத்திய பாஜக அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை, அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் முயல்கிறது. பாஜக அரசின் கட்டளைப்படி செயல்படும் ஆளுநர்களால் கட்டளையிடப்படாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கைகளில் கல்வி இருக்க வேண்டும்.

மத்திய பா.ஜ., அரசின் இந்த நடவடிக்கையானது, அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிக்கவும், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை குறைக்கவும் வழிவகுக்கும்.

கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது, அதிக எண்ணிக்கையிலான உயர்மட்ட உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டு தேசத்தில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, நமது நிறுவனங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதால் அமைதியாக இருக்காது.

கல்வி என்பது நமது அரசியலமைப்பில் ஒருங்கிணைந்த பட்டியலில் இருக்கும் பிரிவு. யுஜிசி.,யின் இந்த நடவடிக்கை ஒரு தலைபட்சமானது. இந்த அத்துமீறலை ஏற்க முடியாது. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழகம் போராடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே முழு அதிகாரம் ! விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி….