சென்னை

ன்று நடைபெற இருந்த தமிழ்நாடு வக்பு வாரியத் தேர்தல் ரத்துக்கு அதிமுகவினரே காரணம் என செய்திகள் வந்துள்ளன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு வக்பு வாரியத்தின் அப்போதைய தலைவராக இருந்த தமிழ்மகன் உசேனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்   அதையொட்டி தமிழ்மகன் உசேன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.   ஆனல்   கடந்த சட்டசபை தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் அவருக்கு போட்டியிட அளிக்கப்பட்ட வாய்ப்பு ரத்து செய்யபட்டது.

அதன் பிறகு தலைவரை தேர்ந்தெடுக்க பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.    இன்று அதற்கான தேர்தல் நடைபெறவதாக இருந்தது.   இன்று திடீரென கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.   இதற்கு தலைவர் பதவிக்காக போட்டியிட்ட இரு மூத்த அதிமுக தலைவர்களின் உட்பூசலே காரணம் என தகவல்கள் கூறுகின்றன.

பெயர் தெரிவிக்க விரும்பாத உறுப்பினர் ஒருவர், “தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்களில் தமிழ்மகன் உசேன் சமூக ஆர்வலர் என்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்காக அன்வர் ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   கட்சி அடிப்படையில் அதிகம் அதிமுகவினர் இருப்பதால் அதிமுக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் பட்டது.

இந்நிலையில்  அன்வர் ராஜா மற்றும் தமிழ்மகன் உசேன் ஆகியோர் இருவருக்கிடையில் போட்டி உண்டாகி உள்ளது.    இதனால் ஈ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் இரு அணிகளுக்கும் கடும் மோதல் உண்டாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.    இதனால் அதிமுக வில் மீண்டும் பிளவு ஏற்படாமல் இருக்கவே இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது”  என தெரிவித்துள்ளார்.