சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (31ந்தேதி) மாலை வரை 1,468 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநிலத் தோதல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி 4ந்தேதி கடைசி நாள். பிப்ரவரி 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது .இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், தமிழநாட்டில் இதுவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோதலில் போட்டியிட 1,468 போ வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (29ந்தேதி) வரை தமிழகம் முழுவதும் 99 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த நிலையில், நேற்று மாநகராட்சித்தேர்தலில் போட்டியிட 219 பேரும், நகராட்சித் தோதலில் போட்டியிட445 பேரும், பேரூராட்சியில் போட்டியிட 705 பேரும் என மொத்தம் 1,369 பேர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ஆக மோத்தம் இதுவரை 1,468 பர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.