சென்னை,
இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடத்திட்டம் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிபிஎஸ்சிக்கு இணையாக பாடத்திட்டம் மாற்ற் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
அதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டது. அரசாணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
இன்று தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.
பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு இனி 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்றும் மேலும் இரண்டரை மணி நேரத்தில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாடத்திட்டம் சிபிஎஸ்இக்கு இணையாக மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து +1, +2 பொது தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
மேலும், 2018-2019ம் கல்வி ஆண்டில், 1, 6, 9,11ம் வகுப்புகளுக்கும், 2020ம் ஆண்டு 3, 4, 5ம்வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.