சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா என்ற வெளிநாட்டு அமைப்பு காரணமாக உச்சநீதி மன்றம்  தடை செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையை நீடித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அகில இந்திய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதியஜனதா மற்றும் மாநில கட்சிகளின் இரட்டை வேடங்களினால் தமிழகத்தின் பாரம்பரியம் அழிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், நமது இந்திய பிரதமரோ வாய்மூடி மவுனியாக உள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாரதியஜனதா அரசு பேடித்ததனமான அரசியல் செய்து வருகிறது.

இதைகண்டித்து தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

அமெரிக்காவில் 25 இடங்களில் தமிழ் அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். வடஅமெரிக்காவின் ஜெயின்லூயிஸ் நகரத்தில் தமிழ் இளைஞர்கள் பறையடித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் இரவு பகல் பாராது  தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூரில் இன்று நான்காவது நாள் போராட்டம் தொடர்கிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அந்த பகுதி மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் 3-வது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதால்,  காலை முதலே மாணவர்கள் மெரினாவை நோக்கி படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொத்தேரியில் உள்ள SRM கல்லூரி மாணவர்கள் 6 ஆயிரம் பேர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல்

இதே போல் கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை வா.உ.சி மைதான போராட்ட களத்தில் மாணவர்களுடன் தற்போது கிப்பாப் தமிழா ஆதி இணைந்துள்ளார். இதன் காரணமாக போராட்டம் சூடுபிடித்துள்ளது.

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மருத்துவ பொறியியல் மாணவர்கள் 2000ற்க்கும் மேற்நட்ட மாணவர்கள் வகுப்புகளை புறகனித்து ராஜேந்திரன் சிலை முன்பு ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரி மாணவர்கள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு கலைக்கல்லூரி மாணவமாணவியர் மற்றும் அரசு பாலிடெக்னிக் மாணவ மாணவியர் 1000த்திற்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிதித்து ஊர்வலமாக சென்றனர்

வேலூரில் அலங்காநல்லூரில் நடைபெறும் அறப்போராட்டத்திற்கும், ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்யக்கோரி 1000 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியார்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிகட்டுமீதான தடையை நீக்க கோரியும் பீட்டாவை தடைசெய்ய வலியுறுத்தி தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம். 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கீழக்கரைக்கு 1000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக செல்கின்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இளைஞர்களின் போராட்டம் 3-வது நாளாக தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 1,000-க்கும் மேற்பட்டோர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசியில் உள்ள புதிய பேரூந்து நிலையம் அருகில் 100க்கும் மேற்பட்ட  இளைஞர்கள்  ஜல்லிக்கட்டு க்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை , கொடைரோடு, வத்தலக்குண்டு, அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும், தமிழர்களின் பழங்கால உரிமைகளை மீட்க கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கல்லூரி மாணவர்கள், சமூக அர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் இரண்டாவது நாளாக தொடர் ஆர்பாட்டம் நடை பெற்றுக்கொண்டு உள்ளது.

நாகை தலைமை தபால் நிலையம் முன்பு நூற்றுக்கணக்கானோர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இளைஞர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.