தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 718 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. ஆனால் இன்று புதியதாக 509 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 509 பேரில் 380 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 42 கொரோனா நோயாளிகள் குணம் பேட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,176 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 , 984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 12,780 பேருக்கு கொரோனா சோதனை நடைபெற்ற நிலையில், இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,467 ஆக அதிகரித்து உள்ளது.
4,623 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனை விவரங்களையும் தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.