சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்து மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்றைய (16/05/2020) நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 3 பேர் பலியானதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 939 பேர் நோய் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமானோர் எண்ணிக்கை 3538 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று புதிதாக கொரோனா பாதிப்புக்குள்ளான 447 பேரில், 384 பேர் தமிழகத்தில் உள்ளவர்கள். இவர்களில் 332 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 93 பேர் மகாராஷ்டிரா, குஜராத், பங்களாதேஷ் மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.
இவ்வாறு தமிழகஅரசு அறிவித்து உள்ளது.