சென்னை: தமிழகத்தில் கொரேனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதியதாக 15,108 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 374 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 1,982 பேரும், ஈரோட்டில், 1,353 பேரம், சென்னையில் 989 பேருக்கும் பதிவாகி உள்ளது.
கொரோனா 2வது அலையின் தாக்கம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழகஅரசு அறிவித்த தளர்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக, தொற்று பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,39,705 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 27,463 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 21,48,352 ஆக உயர்ந்துள்ளது.
இந்று ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி கொரோனா நோயாளிகள் 374 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 29,280 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய உயிரிழப்புகளில், தனியார் மருத்துவமனையில் 130 பேரும், அரசு மருத்துவமனையில் 244 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் 1,62,073 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 2,97,90,743 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,82,878 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.