சீனா,

சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ்போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவி வைசாலி ‘பிளிட்ஸ்’ பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வைசாலி

மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த தொடரில் வைஷாலி 7 சுற்றுகளில் வெற்றியும், இரண்டு சுற்றுகளை டிராவும் செய்து 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைபற்றினார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மங்கோலிய வீராங்கனைக்கு எதிராக விளையாடிய வைசாலி போட்டியை சமன் செய்தார். ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் பெற்ற புள்ளிகளுடன் சேர்த்து வெற்றி பெற்றதால் தங்கம் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதன் காரணமாக ‘பிலிட்ஸ்’ பிரிவில் தங்கமும், வென்று சாதனை படைத்துள்ளார் வைசாலி. இவர் சென்னையை சேர்ந்தவர்.

இதைத்தொடர்ந்து  மற்றொரு இந்திய வீராங்கனையான  பத்மினி ஏழு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆடவர் பிரிவில் தமிழக வீரர் அர்விந்த் சிதம்பரம் ஏழு புள்ளிகளுடன் ஆசிய சாம்பியன்ஷிப்பில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற வைசாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.