சென்னை :

கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க சமூக விலகல், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவிவரும் நிலையில்.

சிறையில் இருக்கும் கைதிகளை இந்த இக்கட்டான நேரத்திலும் பார்க்க வரும் பார்வையாளர்களை தவிர்க்கவும், அவர்களால் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நாட்டின் பல்வேறு சிறைகளில் இருந்து சாதாரண கைதிகளை வெளியில் அனுப்ப முடிவெடுத்த நிலையில்.

தமிழகத்தில், சிறைக்கைதிகள் பாதுகாப்பு குறித்து வித்தியாசமாக யோசித்த தமிழக சிறைத்துறை போலீசார் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சகம். தமிழக சிறைகள் அனைத்திற்கும் 58 அண்ட்ராய்ட் போன்களை வாங்கிக்கொடுத்து சிறையிலிருந்தபடியே வீட்டில் உள்ளவர்களுடன், வீடியோ அழைப்பு மூலம் பேசிக்கொள்ள வழி செய்திருக்கிறது.

சிறைத்துறை அதிகாரிகளிடம் உள்ள இந்த போன்களில் இருந்து தங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் அவர்கள் பேசும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாராட்டுகளை பெற்றுள்ளது. சுழற்சி முறையில் ஒவ்வொரு கைதியும் அதிகபட்சமாக 10 நிமிடம் காலை முதல் மாலை 5 மணி வரை பேச அனுமதிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக சிறைகளில் இருந்து 400 சாதாரண கைதிகள் இதுவரை இடைக்கால ஜாமீனில் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காணொளி காட்சி ….