சென்னையில் நடந்த ஜலலிக்கட்டு போராட்டத்தில், காவலர் ஒருவர் சீருடையில் கந்துகொண்டு பேசியது மாணவர்களை உற்சாகப்படுத்தியது.
அந்த காவலர், “டில்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் போது ஜல்லிக்கட்டுடன் திரும்ப வேண்டும். இல்லையென்றால், தற்போது தமிழனாக போராடும் தான் பின்னர் போலீஸாக போராடுவேன்.
விவசாயத்துக்கு செயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணை சாகடித்துவிட்டார்கள். தற்போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை தடுக்க அரசு என்ன செய்தது? தற்போது ஜல்லிக்கட்டையும் சாகடிக்க முடிவு எடுத்துவிட்டது.
சீருடையில் இருக்கும் பல்வேறு காவலர்களின் சார்பில் தான் போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன்.
காந்தி பிறந்த மண்ணில் தான் நேதாஜியும் பிறந்தார். தமிழன் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டான்.
விவசாயிகள் தற்கொலை தடுக்கவேண்டும். உயர் அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் இருக்கிறது. ஆனால் அவர்கள் பேச தயங்குகிறார்கள்.
மாணவர்கள் தங்களின் போராட்டத்தை இதோடு நிறுத்திக்கொள்ளாமல் விவசாயிகளையும் தற்கொலையை தடுக்கவும் மணல் திருட்டை தடுக்கவும் போராட முன்வர வேண்டும்”என்று அந்த காவலர் பேசினார்.
அவரது பேச்சுக்கு இளைஞர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர்.
Video credit puthiya thalaimurai