கோயம்புத்தூர்: கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள 12 துணைச் சாலைகளை, தமிழ்நாடு காவல்துறை மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் எந்த மாற்றமும் இல்லையெனவும், அங்கே வழக்கம்போல் போக்குவரத்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை கொண்டுவந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு காவல்துறை மூடியுள்ள துணை சாலைகளில், குளத்தூர் பஞ்சாயத்தில் உள்ள பொழியூர் மற்றும் உச்சக்கடா, காரகோனம் அருகிலுள்ள கன்னுவமூடு, பனச்சமூடு, வெல்லராடா மற்றும் அம்பூரி ஆகியவை அடக்கம்.