டில்லி:

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்களின்  அமளி காரணமாக பாராளுமன்ற இரு  அவைகளும்  தொடங்கிய சிறிது நேரத்தில் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

ஏற்கனவே பிஎன்பி வங்கி மோசடி குறித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் பாராளு மன்றத்தில் அமளி செய்வது வரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைச்ச நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு எதிராக தமிழக எம்.பி.க்களும் பாராளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நேற்றும் தமிழக  எம்.பி.க்களின் அமளி காரணமாக நேற்று  பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் கட்சி பாகுபாடின்றி ஒன்றிணைந்து, பார்லிமென்ட் வளாகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்த பாராளுமன்ற நடவடிக்கையில் கலந்துகொண்ட தமிழக எம்.பி.க்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.