டில்லி:

ச்சநீதி மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் உடடினயாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டில்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக நேற்று பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்றும் அதிமுக, திமுக உள்பட அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் ஒன்றிணைந்து காவிரிக்காக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம்,  காவிரி மேலாண்மை வாரியம்  6 வாரத்திற்கள்  அமைக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மத்திய அரசு அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து வரும் 9ந்தேதி காவிரி தொடர்பான 4 மாநிலங்களுடன் கலந்துபேச அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கக்கோரி தமிழகத்த சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் இன்று இரண்டாவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே… மத்திய அரசே வஞ்சிக்காதே… காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு என்ற கோஷங்களுடன் அதிமுக எம்.பி.க்கள், திமுக எம்.பி.க்கள் உள்பட அனைத்துக்கட்சி எம்.பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.