சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என  அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க்குக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர் லான் மஸ்க் (Elon Musk) இளம் தொழிலதிபரான இவர், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மின்சார வாகனங்களில் ஆர்வம் கொண்டவர்.  ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal) டெஸ்லா மோட்டார்ஸ், மற்றும் ஜிப்2 ஆகிய நிறுவனங்களின்  முதலீட்டாளர்.
தற்போது இந்தியாவிலும் மின்சார வாகனங்கள் தயாரிப்பு அதிகரித்து வரும் எலன் மஸ்க்குக்கு, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  வணக்கம் மிஸ்டர் எலோன் @elonmusk. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மொத்த திட்டமிடப்பட்ட முதலீட்டில் தமிழ்நாடு 34% பங்கு வகிக்கிறது.  மேலும், உலகின் முதல் ஒன்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில் தமிழ்நாடும் ஒன்றாகும்.  இந்தியாவின் மின்சார வாகன தயாரிப்பு கூட்டாண்மைக்காக தமிழ்நாடுடன் கைகோர்க்க தலைநகருக்கு வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரக்கூடியது எலன் மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார். இந்த காருக்கு  இந்தியாவில் இறக்குமதி வரி சலுகை கோரப்பட்டு வருகிறது. இதுகுறித்த இந்திய அரசு இன்னும் உறுதியான முடிவை தெரிவிக்கவில்லை. , இந்திய அரசிடம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக சமீபத்தில் எலன் மஸ்க் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, தங்களது மாநிலங்களில் மின்சார கார் தொழிற்சாலை அமையுங்கள், தேவையான உதவிகளை செய்கிறோம் என தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்க அரசுகள்  எலன் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முதலீடு செய்ய வருமாறு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  அழைப்பு விடுத்துள்ளார்.