டெல்லி: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது. போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் கூறியதாகவும்,. அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாக சந்திப்பே என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு விவகாரம், உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே உள்ளது. அதனால், தற்போதைய நிலையில், எடப்பாடிதான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பிரமுகராக இருந்து வருகிறார். இந்த நிலையில்இ, நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை உள்துறை அலுவலகத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். டெல்லி நார்த் ப்ளாக்கில் உள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. எடப்பாடியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த கோரிக்கை வைத்தேன் என்றும் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம் என்றும் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது. போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு போதை பொருட்கள் தடை இன்றி கிடைக்கின்றது. அதனை மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
ஏற்கனவே இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோக மாக நடைபெறுகிறது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள், பிரதமர் மோடியை சந்திப்பீர்களா என கேள்வி எழுப்பினர், அதற்கு அப்படியொரு திட்டம் இல்லை என்று மறுத்தவர், அமித்ஷாவுடனான சந்திப்பின் போது அரசியல் சம்பத்தமாக எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.