துபாயில் ஏமாந்து நிற்கும் தமிழக தொழிலாளிகள்!

Must read

நெட்டிசன்:

துபாயில் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பிரஸ்டிஜ் அன்ட் டெவலப்மென்ட் காண்ட்ராக்டிங் கம்பனியில் வேலை வாங்கி தருகிறோம், உணவு, தங்குமிடம் இலவசம் என கூறி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் தமிழகத்தை சார்ந்த ஒன்பது இளைஞர்கள். இவர்களிடம்  மொத்தமாக ஆறுலட்சத்தி அறுபத்தி ஏழாயிரம் (ரூ. 6,67,000) ரூபாயை ட்ராவல் ஏஜெண்டுகள் ஏமாற்றி வாங்கி துபாய் அனுப்பி வைத்துள்ளனர்.

பிளம்பிங் வேலை, சிஸ்டம் ஆப்பெரடேர் என சொல்லி அழைத்து வந்தவர்கள், இங்கே கேமரா கேபிள் இழுக்கும் வேலையை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். தவிர, உணவும் தங்குமிடத்துக்கும் கட்டணம் போட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல..தற்பொழுது மாத சம்பளமும் வழங்கப்படவுமில்லை. துபாயில் உள்ள இந்திய கிளை தூதரகத்தில், இந்த ஒன்பது தொழிலாளர்களும் புகார்மனு கொடுத்தனர். ஆனால், இந்திய தூதரக அதிகாரிகள் சட்டபூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

தூதரகம் வந்த அரபி கம்பனி முதலாளி, மாத சம்பளம் தர முடியாது.  இந்தியா திரும்ப ஏழாயிரம் திராம்ஸ் பணத்தை (அதாவது சுமார் ஒன்டரை லட்சம் இந்திய ருபாய் பணம்) தரவேண்டும் எனவும் சொல்லி விட்டு கிளம்பியுள்ளார்.  இந்திய தூதரக அதிகாரிகளும், அந்த அரபி முதலாளிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கொண்டிருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் அரபி முதலாளி பறித்து வைத்திருக்கும் தங்கள் பாஸ்போர்ட்டுகளை பெற்று தருவதற்கு ஏற்ப்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்த பின்னரும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த தொழிலாளர்களை கீழ்காணும் துபாய் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்:
00971565418213, 00971504148671, 00971562756517, 00971569354785, 00971508955994, 00971565418212, 00971 509623744, 00971 504889104, 00971544252329.

இந்த தொழிலாளர்களிடமிருந்து ஏமாற்றி பணம் பறித்து துபாய்க்கு அனுப்பிவைத்த ஏஜண்டுகளை கீழ்காணும் மொபைல் எண்களில் தொடர்புகொள்ளலாம்:

1) சக்கரை கனி, புதுக்கோட்டை,
GS consultants,
Santhanathapuram, Pudukkottai – 622001, Tamil Nadu, India.
Mobile No +91 – 8883026093, 7094351646, 8110945115.

2) அஜ்மல், அஜ்மல் ட்ராவல்ஸ், மதகுபட்டி.
Ajmal Travels,
Opp to Bus Stand, Mainroad, Mathagupatti, Sivagangai District, Tamil Nadu, India.
Mobile No: 0091 – 7373708786, 9444887786, 94486694812
Phone No: 0091 – 4575 – 230403, 230225.
Email: <ajmaltravels2012@gmail.com>

3) சுதாகர், ஏபல் ஏர் ட்ராவல்ஸ், மயிலாடுதுறை.
Abel Air Travels,
#9/10, 1st Floor, Diamond Complex, Opp to LIC Office, Avaiyambalpuram, Mayiladuthurai – 609001, Nagapattinam District, Tamil Nadu, India.
Mobile No:0091 – 9787599562, 7373913054.

4) அப்பாஸ், ரபீக் ட்ராவல்ஸ், திருச்சி.
Rafick travels,
No.168, J.J.Tower, 3rd Floor, Madurai Road, Trichy – 620008, Tamil Nadu, India.
Mobile No: +91-9787294612, 9788072007

5) என். ரமேஷ்,
Marketing Manager,
Prestige & Development Contracting,
Thittakudi, Cuddalore District, Tamil Nadu, India.

P.O.Box: 99314, Dubai, United Arab Emirates.
Mobile No: 00971 – 562981839.
Phone No: 00971 – 42598992
Fax No: 00971 – 42598993.

அந்த தொழிலாளர்களின் கண்ணீர்க்கதையை கேளுங்கள்: ( வீடியோ)
 

 

 

More articles

Latest article