சென்னை

மிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.  இதில் முதல் கட்டமாக கொரோனா கட்டுப்பாட்டுப் பணியில் உள்ள முன்கள பணியாளர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  அடுத்த கட்டமாக முதியோருக்கு போடப்பட உள்ளது.

இதற்காக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளுக்கு அவசர பயன்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.  இது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவன கூட்டுக் கண்டுபிடிப்பாகும்.,  கோவாக்சின் தடுப்பூசி பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து உற்பத்தி செய்யும் தடுப்பூசி ஆகும்.

இந்த கொரோனா தடுப்பூசிகளைப் பல உலகத் தலைவர்கள் போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.  ஆனால் தமிழகத்தில் யாரும் போட்டுக் கொள்ளாமல் இருந்தனர்.  இந்நிலையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.  அவருக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.