மதுரை:

நெல்லை, குமரி மாவட்டத்தில் இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டதாக  மதுரை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல் தெவித்து உள்ளது.

இதுதொடர்பாக வழக்கு இன்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் நடைபெற்றது.  விசாரணையின்போது,  தூத்துக்குடியில் பதற்றம் நிலவியதால் இணையதள சேவை முடக்கம் என்பது ஏற்புடையது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவையை முடக்கியது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மாலை 3 மணிக்கு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து வழக்கு மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, நெல்லை, குமரி மாவட்டத்தில் இணையதள சேவை முடக்கம் ரத்து செய்யப்படுவதாக மதுரை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.