தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 1ம் தேதி புத்தாண்டுக்காகவும், 15, 16, 17ம் தேதிகளில் பொங்களுக்காகவும், 26ம் தேதி குடியரசு தினத்திற்காகவும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 25ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 1ம் தேதி வருடக் கணக்கு முடிவுக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி மகாவீர் ஜெயந்திக்கும், 10ம் தேதி புனித வெள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மே 1ம் தேதி மே தினத்திற்காகவும், 25ம் தேதி ரமலானுக்காகவும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஆகஸ்ட் 1ம் தேதி பக்தீர், 11ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, 15ம் தேதி குடியரசு தினம், 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி, 30ம் தேதி மொஹரம் என ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, 25ம் தேதி ஆயுத பூஜை, 26ம் தேதி விஜயதசமி, 30ம் தேதி மிலாடி நபிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, டிசம்பர் 25ம் தேதி கிருத்துமஸ் கொண்டாட்டத்திற்காகவும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த பொதுவிடுமுறை, அரசு ஊழியர்கள், தமிழகத்தில் செயல்படும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.