சென்னை:
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், கோரமண்டல் ரயிலில் தமிழர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், நாரகணிகோபி, கார்த்திக், ரகுநாத், மீனா, ஜெகதீசன், கமல், கல்பனா, அருண் ஆகியோரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொண்டவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.