சென்னை: தமிழ்நாட்டில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (வெள்ளிக்கிழமை)  மாலை 5.30  மணிக்கு வெளியிடுகிறார்.

இன்று வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில்,  97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண் Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள் முகவரி மாற்றியவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும். இப்படி நீக்கப்பட்டதற்கான காரணமும் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும். இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில், இறந்தவர்கள் வாக்கு, போலி வாக்கு, வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள் முறைகேடாக பெற்றுள்ள வாக்குகளை அகற்றும் வகையில், இந்திய தேர்தல் ஆணைய்ம எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்ததை மேற்கொண்டு வருகிறது.  இந்த பணிகள் தமிழ்நாடு முழுவதும்  நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எஸ்ஐஆர் தொடர்பான படிவங்களை வீடுவிடாக விநியோகித்து, அதை நிரம்பி தரும் கோரினர்.  இந்த கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ந்தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.  இந்த பட்டியிலில்,  தொடர்பு கொள்ள முடியாத வாக்காளா்கள், இறந்தவா்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளா்கள் என குறிக்கப்பட்ட வாக்காளா்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டு அது பிஎஎல்ஓ ஆப் (BLO App) என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றே கூறப்படுகிறது. இதனுடன், தவறுதலாக, படிவத்தில் பிழையாக எழுதிக் கொடுத்ததால், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால்,  வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னா்,  அதில் தங்களது பெயரை கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளா்களில் பட்டியலில் இடம்பெற்றவா்கள் உள்ளிட்டோரின் விவரங்களை அறிந்துகொள்ளும் வசதி, அந்தந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபாா்த்துக் கொள்ளலாம் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருவரது பெயர் ஏன் நீக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை இந்த இணையதளம் வாயிலாக அறியலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனைகளோ, பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, டிசம்பர் 19 முதல் 2026ஆம் ஆண்டு ஜன. 18ஆம் தேதி வரை உரிமை கோரல்கள், மறுப்புரைகள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் விண்ணப்ப படிவம் 6-யை பெற்று அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஜனவரி 18ந்தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். பின்னர், அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெறும். அதன் பிறகு தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இடம் பெற செய்வார்கள். இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,

[youtube-feed feed=1]