சென்னை:
வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலை ரத்து செய்தது தவறு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். மேலும், தவறு செய்தவர்களை தகுதி நீக்கம் செய்து விட்டு தேர்தலை நடத்தியிருக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பல இடங்களில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையிட்டு ஏராளமான பணம், நகைகளை கைப்பற்றி வருகின்றனர்.
கடநத் மார்ச் மாதம் 30ம் தேதி வேலுர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தை துரை முருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் காட்பாடி யில் சிமெண்ட் குடோனில் ரூ.11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யும்படி குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, திமுக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது இது ஜனநாயக படுகொலை, திமுகவை அவமான படுத்தும் நோக்கத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தேர்தலின்போது பணம் கொடுக்கும் வேட்பாளர் கள் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்க கூடாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் அங்கு தேர்தல் நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும்
வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் உள்பட 28 பேர் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.