சென்னை:

காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்கும் முயற்சியை மேற்கொண்ட மத்திய அரசு பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது.

இந்நிலையில் மே 3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஏதேனும் காரணங்களை கூறி தாமதப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டால் தமிழகத்தில் போராட்டம் அதிகமாகும் என தெரிகிறது.

இது குறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ராஜ்பவனில் இன்று ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் சென்றனர்.