ஜல்லிக்கட்டு மீதான தடை அவசர சட்டம் மூலம் நீங்கிவிட்டது என்று அறிவித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கப்போதாக அறிவித்தார். ஆனால் அவசர சட்டம் தேவையில்லை, நிரந்த தீர்வு வேண்டும் என்று கோரி, போராட்டக்காரர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அலங்காநல்லூரில் பல்லாயிரம் போராட்டக்காரர்கள், போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்து மறியல் செய்து வருகிறார்கள். இதனால் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அலங்காநல்லூர் விசிட் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக திண்டுக்கல் அருகே உள்ள நத்தத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை அவர் துவக்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், நத்தம் ஜல்லிக்கட்டில் முதல்வர் பங்கேற்கவில்லை என்றும் சென்னை திரும்புகிறார் என்றும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.