டெல்லி: ராகுல்காந்தியின் பாரத் ஜோடா பாத யாத்திரை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ், செப்டம்பர் 7ஆம் கன்னியாகுமரியில் பா யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் காதியிலான தேசிய கொடி வழங்குவார் என கூறினார்.
2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டும், மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், குமரியில் இருந்து காஷ்மீர் வரை பல்வேறு மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் பாரத் ஜேடோ பாதயாத்தை என்ற பெயரில் ஒற்றுமைக்கான யாத்திரையை தொடங்குகிறர். செப்டம்பர் 7ந்தேதி மாலை அவரது பாத யாத்திரை தொடங்க உள்ளது.
முன்ன்னதாக கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் காந்தி மண்டபம், காமராஜர் சிலைகளுக்கு மரியாதை செய்கிறார். அதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தி மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள், யாத்திரை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் பொதுப்பேரணி நடைபெறும் இடத்திற்கு நடந்து செல்கின்றனர்.
அங்கு நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, காதியிலான தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் ஒப்படைத்து பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியா குமரியில் உள்ள காமராஜர் மண்டபத்திற்கும், பின்னர் காந்தி மண்டபத்திற்கும் ராகுல்காந்தி வருகை தருகிறார். அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியிடம் தேசியக் கொடியை ஒப்படைப்பார். இந்த தேசியயொடி காதியால் ஆனது என்றும் கூறினார்.
சமீபத்தில் 75வது சுதந்திரன தின விழாவின்போது, உபயோகப்படுத்தப்பட்ட தேசிய கொடியானது, காதியில் தயாரிக்கப்படாமல் மற்ற துணிகளிலும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் காணப்பட்டது. மேலும், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கலந்து கொண்டனர். அப்போது இந்தியக் குழுவினர் தேசியக் கொடிகளுடன் மாநாட்டுக்கு சென்றனர். அந்தக் கொடியில் ‘மேட் இன் சீனா’ என முத்திரையிடப்பட்டிருந்ததை கண்டு இந்தியக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை மாநில சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொண்டு சென்றனர். தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. தேசியக் கொடிகளைக்கூட மத்திய அரசு இறக்குமதி செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்த நிலையில், ஜெய்ராம் ரமேஷ், காதியிலான தேசியகொடியை தமிழக முதல்வர் வழங்குவார் என்று தெரிவித்துள்ளார்.