சென்னை: தமிழக  தலைமைச்செயலாளர் சண்முகம் உள்பட மாநில அரசின் முக்கிய உயர் அதிகாரிகள் இன்று மாலை திடீர் டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், இ-பாஸ் முறையில் எந்தவித தளர்வுகளும் அளிக்கப்படாமல் உள்ளது. மேலும், மத்தியஅரசின் பல்வேறு திட்டங்க ளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

குறிப்பாக புதிய கல்விக்கொள்கை, சூற்றுச்சூல் வரைவு அறிக்கை, மருத்துவக்கல்வியில் ஓபிசி இடஒதுக்கீடு, நீட் தேர்வு விவகாரம் போன்றவற்றில், மத்தியஅரசின் முடிவுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது. தமிழகஅரசும், பல பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளது. இதனால், மத்தியஅரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் பலரை, உடனே டெல்லி புறப்பட்டு வரும்படி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி,  தமிழக தலைமைச் செயலாளர்  சண்முகம், தமிழக முதல்வரின் செயலாளர் பி.செந்தில்குமார், தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர் மற்றும் தமிக டிஜிபி ஜே.கே திரிபாதி ஆகியோர் இன்று மாலை விமானம் மூலம்  சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணமாகின்றனர்.

மத்தியஅரசின் இந்த திடீர் உத்தரவு தலைமைச்செயலக வட்டாரத்தில் பரபரப்பையும், சலசலப்பை யும்  ஏற்படுத்தி உள்ளது.