சென்னை,
தமிழக புதிய தலைமைசெயலாளராக பதவி ஏற்றுள்ள கிரிஜா வைத்தியநாதன் இன்று தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு காரணமாக, பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைதொடர்ந்து புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
 
 

புதிய தலைமை செயலாளர் இன்று திடீரென்று ராஜ்பவன் சென்று, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது, அவருடன் மாநில நிலைமை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பழைய தலைமை செயலாளர் ராமமோகன்னராவ் பத்திரிகையாளர்களிடம் தனது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ளது அறை ரெய்டு குறித்து, ஆவேசமாக மத்தியஅரசுமீது குற்றம் சாட்டிய நேரத்தில், புதிய தலைமை செயலாளர் கவர்னரை சந்தித்தது கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.