சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 4ந்தேதி நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் வரும் 4ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்வது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இதேபோன்று, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல், தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.